பரபரப்பான உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் உலகக் கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைக்கப் போவது யார்?

509

FIFA

உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் வலுவான ஜேர்மனி, அசத்தலான அர்ஜென்டினா இடம் பெற்றுள்ளது. கிண்ணம் யாருக்கு என்பதில் இரு அணிகளுக்கும் பலத்த போர் நடைபெறவுள்ளது.

லீக் சுற்றில் தொடங்கிய கால்பந்து அதிரடியாய் உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டது. ரசிகர்கள் வரலாறு படைக்க போகும் அந்த அணியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

கிண்ணம் ஒன்று ஜேர்மனிக்கு அல்லது அஜென்டினாவிற்கு தான் கிடைக்கவுள்ளது. ஜேர்மனி சிறப்பான ஆட்டத்தை நம்பியிருக்கும் அதே சமயத்தில் அர்ஜென்டினா அதிர்ஷ்டத்தை நம்பியுள்ளது.
தொடக்க முதலே ஜேர்மனி அதிரடி காட்ட அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி அர்ஜென்டினா இறுதிப்போட்டி வரை நுழைந்துள்ளது. ஒரு வேளை அந்த அதிர்ஷ்டம் கூட இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவிற்கு கைகொடுக்கலாம்.

ரவுண்ட் 16ல் அதிரடியாய் 16 அணிகள் நுழைந்து காலிறுதிக்கு 8 அணிகள் தகுதி பெற்றன. அவை பிரேசில், கொலம்பியா, நெதர்லாந்து, கோஸ்டாரிகா, பிரான்ஸ், ஜேர்மனி, அர்ஜென்டினா, பெல்ஜியம். இந்த அணிகளில் பிரேசில், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகியவை தனது ஆதிக்கத்தை காலிறுதியில் நன்றாகவே காட்டின.

காலிறுதியில் இருந்து முட்டிமோதி பிரேசில், அர்ஜென்டினா, ஜேர்மனி, நெதர்லாந்து என வலிமை வாய்ந்த அணிகள் அரையிறுதியில் நுழைந்தன.

முதல் அரையிறுதியில் பிரேசிலில் ஆதிக்கம் கொண்ட பிரேசில் அணியும், வலிமை வாய்ந்த ஜேர்மனி அணியும் மோதின.
நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மரின் மிகப்பெரிய இடைவெளி, பிரேசில் அணித்தலைவர் தியாகோ சில்வாவின் வெளியேற்றம் ஆகிய பலவீனத்தை நன்றாக புரிந்து கொண்டது ஜேர்மனி.

தொடர்ந்து கோல் மழையாய் பொழிந்தது ஜேர்மனி. ஜேர்மனியை சமாளிக்க முடியாமல் தவித்ததை உள்ளூர் ரசிகர்களாலே பார்க்க முடியாமல் பாதி போட்டியிலே அரங்கத்தை காலி செய்யும் நிலை ஏற்பட்டது.

முடிவில் 94 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத மோசமான தோல்வியை 7-1 என்ற கணக்கில் பிரேசில் சந்தித்தது. இந்த வரலாற்று தோல்வியால் ரசிகர்கள் மனமுடைந்து போயினர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் இறுதிப்போட்டியில் பிரேசிலிடம் ஜேர்மனி அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது மட்டுமல்லாது பிரேசிலுக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்து விட்டது ஜேர்மனி.

இரண்டாவது அரையிறுதியில் அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் மோதின. கால்பந்து தொடரின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து, அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் 4- 2 என்ற கணக்கில் தோற்று வெளியேறியது.

இந்த உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவும் ஜேர்மனியும் மோதவுள்ளன. கிண்ணத்தை வெல்ல போகும் அந்த அணியை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

அனைவரின் கணிப்பு படியும் ஜேர்மனிக்கு தான் கிண்ணம் என்ற கருத்து நிலவி வருகிறது. அதே சமயம் கிண்ணம் கிடைத்தால் தான் திருமணம் என்ற லட்சியத்தோடு சுற்றிக் கொண்டுள்ளார் அணித்தலைவர் மெஸ்ஸி.

இந்த இறுதிப்போட்டியானது வருகின்ற 13ம் திகதி நடக்கவுள்ளது. அதே போல் மூன்றாவது இடத்திற்கான ஆட்டமானது வருகின்ற 12ம் திகதி நடைபெறுகிறது. இதில் அர்ஜென்டினாவிடம் தோல்வியுற்ற நெதர்லாந்தும், ஜேர்மனியுடன் தோல்வியுற்ற பிரேசிலும் மோதுகின்றன.