
18 வயசு என்பதெல்லாம் உயிரை இழக்கிற வயசே.. இன்ஸ்டாவுல லைக்ஸ், ஷேர்களுக்கு ஆசைப்பட்டு உயிரைப் பணயம் வைத்து பலரும் வீடியோக்களை எடுத்து பதிவிடுகின்றனர். அப்படி உயிரை இழந்திருக்கிறார் இன்ஸ்டா பிரபலமான 18 வயதான மனிஷா.
உத்தரபிரதேச மாநிலம், லக்னோ மாவட்டம், விகாஸ் நகர் செக்டார் சங்கோலி கிராமத்தை சேர்ந்தவர் மனிஷா (வயது 18). இன்ஸ்டாகிராமில் வீடியோ ரீல்களை வெளியிட்டு பிரபலமானவர். சம்பவத்தின் போது, அந்த பெண் லக்னோவில் உள்ள இந்திரா ஏரியில் தண்ணீருக்கு மிக அருகில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.

அவர் தனது காதலி மற்றும் உறவினர்களுடன் இளம் குழந்தைகளுடன் வந்திருந்தார். ஒரு கட்டத்தில் ரீல்களின் ஆர்வத்தில் அந்த பெண் தண்ணீரில் மூழ்கியபோது, தண்ணீரின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடித்துச் செல்லப்பட்டார்.
அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உதவி கேட்டு அலறினர். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் மற்றும் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், மீட்பு குழுவினர் தொடர்ந்து பெண்ணை தேடி வருகின்றனர்.
மனிஷா நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மனிஷா தண்ணீரில் மூழ்கும் முன் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. மனிஷாவின் உடலைத் தேடி வருகின்றனர்.





