
நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலர் நெஸ்வாடியா மீதான பாலியல் புகாரை நிரூபிக்க புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது மும்பை மெரீன் டிரைவ் பொலிசில் பாலியல் புகார் கொடுத்தார்.
இந்த புகார் பற்றி தீவிர விசாரணை நடத்தி ஆதாரங்களை பொலிசார் திரட்டி வருகிறார்கள். எந்த விதமான ஆதாரங்களும் கிடைக்காத நிலையில் இதுவரை நெஸ் வாடியா மீது பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நெஸ் வாடியா தனது கையை பிடித்து தொல்லை கொடுத்தபோது, கையில் காயம் ஏற்பட்டதாக கூறி, அதற்கான 4 புகைப்பட ஆதாரங்களை ப்ரீத்தி ஜிந்தா பொலிசிடம் கொடுத்துள்ளார்.
இது பற்றி பொலிசார் ஒருவர் கூறுகையில், ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த புகைப்படங்கள் புகாருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் என்றும், இதனால் அந்த புகைப்படங்களை ஆய்வு செய்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்





