தமிழகத்தின் முதல் சோதனைக் குழாய் குழந்தை பெண்ணுக்கு பிறந்த குழந்தை!!

1021

Test Tube Baby

தமிழகத்தின் முதல் சோதனை குழாய் குழந்தையாக பிறந்த பெண்ணிற்கு நேற்று சென்னையில் உள்ள மருத்துமனை ஒன்றில் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 1989ம் ஆண்டில் தென்னிந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையாக பிறந்த கமலா ரத்னம் (24) நேற்று அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

இதுகுறித்து கமலா ரத்னத்தை பிரசவித்த மருத்துவர் கமலா செல்வராஜ் கூறியதாவது, இந்த நாளுக்காக தான் நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன். 24 வருடங்களுக்கு முன் கமலா பிறந்த போது பல்வேறு விதங்களில் அச்சங்கள் எழுப்பப்பட்டது.

ஏனெனில் அவள் சோதனை குழாய் குழந்தையாக இருந்ததால், அவளால் சகஜமான வாழ்க்கையை வாழ முடியுமா, அவருக்கு குழந்தை பிறக்குமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டது.

ஆனால் தற்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்ததுடன், அப்பெண்ணின் குறித்த கவலையும் நீங்கியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

மேலும் மருத்துவமனையில் உள்ள பிள்ளைப்பேறு அறைக்குள் காலை 9 மணிக்கு சென்ற கமலா 7 மணி நேரங்கள் உள்ளேயே இருந்து கமலா ரத்னம் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க கடுமையாக பாடுப்பட்டுள்ளார்.