கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம்.. தேடும் பணி தீவிரம்!!

373

தமிழகத்தில் அடுத்தடுத்து நீர் நிலைகளிலும் கடலிலும் குளிக்கும் இளைஞர்களின் உயிரிழப்புகள் அதிர்ச்சியளிக்கிறது. விடுமுறை தினம் என்பதால் இளைஞர்கள், மாணவர்கள் கடல், ஏரி போன்ற நீர்நிலைகளில் குளிக்கச் செல்கின்றனர்.

இதனால் அவ்வப்போதும் விபத்தும் ஏற்படுகிறது. அந்த வகையில், கன்னியாகுமரியில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதேபோல் கடலோரப் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

குறிப்பாக தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் கட்டுமரத்தில் சென்று மீன் பிடிப்பது வாடிக்கையாகி விட்டது. கட்டுமரத்தில் மீன் பிடிக்கச் சொல்லும் மக்களும் கள்ளக் கடல் நிகழ்வால் மீன்பிடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை அடுத்த குண்டுக்கல் துறைமுகத்தில் நேற்று மதியம் பாம்பன் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 7 பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த முஹம்மது முஜாஹித் (20) என்ற வாலிபர் திடீரென கடலின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் கடலில் மூழ்கி தலைமறைவானார்.

இதையடுத்து மீனவர்கள் உதவியுடன் காணாமல் போன இளைஞரை கடலோர காவல் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலில் நீந்துவது நல்ல அனுபவமாக இருந்தாலும், இந்த நேரத்தில் இதை தவிர்க்குமாறு எதிராக வானிலை ஆய்வு மையமும், கடல்சார் ஆராய்ச்சி மையமும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.