புழல் சிறையிலிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேர் விடுதலை!!

574

Puzalகடந்த மாதம் 22ஆம் திகதி இலங்கை மீனவர்கள் 12 பேர் எல்லை தாண்டி சென்னை துறைமுகம் அருகே மீன் பிடித்தனர். இதையடுத்து இலங்கை மீனவர்கள் 12 பேரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இன்று அவர்கள் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.

தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதையடுத்து, புழல் சிறையில் இருந்த இலங்கை மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து அவர்கள் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டனர்.

புழல் சிறையில் இருந்து வெளியே வந்த இலங்கை மீனவர்கள் 12 பேரும், தனி வேன் மூலம் எழும்பூரில் உள்ள புத்த மடத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு தங்கி இருக்கும் அவர்கள் இன்று இலங்கைக்கு அனுப்பப்படுகிறார்கள்.