
ஹிருத்திக் ரோஷன் இந்தி படமொன்றில் நடிக்க 50 கோடி கேட்டுள்ளார். இது இந்திய அளவில் இதுவரை எந்த நடிகரும் வாங்காத பெரிய தொகையாகும். இதை கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி உள்ளனர்.
ஹிருத்திக் ரோஷன் இந்தியில் முன்னனி நடிகராக உள்ளார். இவர் நடித்த பல படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது. சமீபத்தில் மனைவி சுசானேயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். இருவரும் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அசுதோஷ் கவ்ரிகர் இயக்கும் மொகஞ்சதாரோ என்ற சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க ஹிருத்திக்ரோஷனை அணுகினர். அவர் ரூ.50 கோடி சம்பளம் கேட்டாராம். ஏற்கனவே ஜோதா அக்பர் சரித்திர படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து இருந்தார்.
எனவே பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் மொகஞ்சதாரோ படத்துக்கு ஹிருத்திக் ரோஷன் தான் பொருத்தமாக இருப்பார் என்று படக்குழுவினர் கருதுகின்றனர். எனவே ஹிருத்திக் ரோஷன் கேட்ட 50 கோடியை கொடுக்க தயாரிப்பு தரப்பு முன்வந்துள்ளது.





