சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஹன்சிகாவின் காதல் கதையும் ஓடுகிறதாம்!!

434

Simbu

வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் காதல் குதிரையில் ஏறி பறந்தவர் சிம்பு. அவர்கள் காதலித்தது என்னவோ குறுகிய காலம்தான் என்றாலும், அப்போது அவர்கள் உதடு கடித்து எடுத்துக்கொண்ட அசைவ போட்டோக்கள் இப்போதுவரை இணையதளங்களுக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கின்றன.

பின்னர் நயன்தாராவுடனான காதல் பிரேக் அப் ஆனதையடுத்து ஹன்சிகாவை பிக்கப் செய்த சிம்பு, அவருடன் காதல் லூட்டி அடித்த போட்டோக்களையும் அவ்வப்போது தனது டுவிட்டரில் வெளியிட்டு மேலும் இணையதள நேயர்களை சூடு காட்டி வந்தார்.

ஆனால் இப்போது இரண்டாவது காதலும் பேக்கப் ஆனதையடுத்து, முதல் காதலியான நயன்தாராவுடன் மீண்டும் காதல் வளர்த்துக்கொண்டிருக்கிறார்.

அதற்காகவே தனது சொந்த காசில் இது நம்ம ஆளு படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு-நயன்தாராவின் காதலை வைத்தே கதை நகர்த்தப்பட்டுள்ளதாம், அதோடு, இடையினில் புகுந்த ஹன்சிகாவின் காதலையும் சொல்லியிருக்கிறார்களாம்.

அதனால்தான் அப்படத்தின் டீசரில் உங்களுக்கு யாரை பிடிக்கும்? என்று நயன்தாரா, சிம்புவைப்பார்த்து கேட்க, உன்னை மட்டும்தான் பிடிக்கும் என்று அவர் சொல்வார். அதற்கு இதே பதிலை எத்தனை பேர்கிட்டதான்டா சொல்லுவே என்று சூரி ரிப்பீட்டு அடிப்பார்.

அடுத்து, நயன்தாரா, அந்த பொண்ணுக்கும் உங்களுக்கிடையே எதற்காக லவ் பிரேக்அப் ஆனது என்று கேட்பார். இதற்கு சிம்பு பதில் சொல்ல முடியாமல் தவிக்க, மாட்னான்டா சிலம்பரசன் என்று சூரி கமெண்ட் கொடுப்பார்.

இப்படிதான் இது நம்ம ஆளு படத்தில் ஹ்ன்சிகாவின் காதலை உருட்டி திரட்டி கதை பண்ணியிருக்கிறார்களாம். ஆக தனது சொந்த காதல் கதையை சொந்த காசில் படமெடுக்கிறார் சிம்பு.