பூஜை படப்பிடிப்பில் விபத்து : விஷால் மீண்டும் காயம்!!

432

Poojai

பூஜை படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு விஷால் மீண்டும் காயம் அடைந்தார். இந்த படத்தை ஹரி இயக்குகிறார். நாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. சண்டை காட்சிகள் அங்கு படமாக்கப்படுகின்றன. ஏற்கனவே சண்டை காட்சியில் நடித்த போது விபத்து ஏற்பட்டு விஷால் காயம் அடைந்தார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சில நாட்கள் ஓய்வும் எடுத்தார். இப்போது இரண்டாவது தடவையாக அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்தி நடிகர் முகேஷ் திவாரியுடன் சண்டை காட்சியில் நடித்து கொண்டு இருந்த போது இந்த காயம் ஏற்பட்டது.

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் இந்த சண்டை காட்சியை வடிவமைத்து இருந்தார். உயரத்தில் இருந்து விஷால் குதிக்க வேண்டும். அப்போது அவர் கால் இடறி வேறு இடத்தில் விழுந்து விட்டார். முகத்தில் அடிபடாமல் இருக்க வலது கையை ஊன்றினார். அதில் அவரது கை முறிந்தது. உடனடியாக வைத்தியர்கள் சிகிச்சை அளித்தனர்.

இது குறித்து விஷால் கூறும் போது, அடிபட்டதும் வைத்தியர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர். எனக்கு எந்தெந்த படப்பிடிப்புகளில் காயம் ஏற்பட்டதோ அந்த படங்களெல்லாம் வெற்றிகரமாக ஓடி உள்ளன. சண்டை கோழி, மலைக்கோட்டை படங்களில் காயம் அடைந்தேன். அவை சூப்பர் ஹிட் படங்களா அமைந்தன. அது போல் இந்த படமும் நன்றாக ஓடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.