சர்வதேச போட்டிகளில் பந்து வீச சசிந்ர சேனாநாயக்கவுக்கு தடை!!

895

Senanayaka

உடனடியாக அமுலாகும் வகையில் சர்வதேச போட்டிகளில் பந்து வீச சசிந்ர சேனாநாயக்கவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எல்லை மீறிய பந்து வீச்சு நிரூபணமான நிலையில் இவருக்கான தடையை ஐசிசி அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கடந்த இங்கிலாந்து தொடரில் இவர் பந்தை எறிவதாக சர்ச்சை எழுந்ததுடன் இவரது பந்துவீச்சை ஆய்வு செய்த சர்வதேச கிரிக்கெட் சபை இத்தடையை விதித்துள்ளது.

இதனால் இனிவரும் போட்டிகளில் சசிந்ர சேனாநாயக்க விளையாடமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இவரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.