மூன்றாவது இடத்தையும் இழந்த பிரேசில் அணி : மீளமுடியாத சோகத்தில் பிரேசில் ரசிகர்கள்!!

448

Brazil new

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மூன்றாவது இடத்திற்கான போட்டி இன்று நள்ளிரவு இடம்பெற்றது. இந்தப் போட்டியில் பிரேசில் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின.

விறுவிறுப்பான போட்டியில் நெதர்லாந்து அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 0-2 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் இதற்கு பதிலடி கொடுக்க பிரேசில் அணி கடுமையாகப் போராடியது. ஆனால் அவர்களின் கோல் முயற்சியை நெதர்லாந்து வீரர்கள் தவிடுபொடியாக்கினர்.

இறுதியல் கூடுதலாக தரப்பட்ட நிமிடங்களிலும் நெதர்லாந்து அணி ஒரு கோல் அடித்து மூன்றாவது இடத்தை கைப்பற்றியது. நெதர்லாந்து அணியில் பெர்ஸி, பிளைண்ட், வினால்டம் தலா ஒரு கோல் அடித்தனர்.

மூன்றாவது இடத்தைப் பிடித்த நெதர்லாந்து அணி வீரர்களுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது.

சொந்தநாட்டில் மூன்றாம் இடத்தையும் இழந்ததால் பிரேசில் வீரர்களும் ரசிகர்களும் மீளமுடியாத சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.