மனைவியைக் கொன்று வீட்டின் பின்புறத்தில் புதைத்த கணவர் பொலிஸில் சரண்!!

560

Murder

மனைவியைக் கொலை செய்து வீட்டின் பின் புறத்தில் புதைத்த கணவர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். காலி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மனைவி கள்ளத் தொடர்பு ஒன்றை பேணி வருவதாகத் சந்தேகித்து, மனைவியை குறித்த நபர் கொலை செய்துள்ளார்.

மிகக் கொடூரமான முறையில் தாக்கி மனைவியைக் கொலை செய்து, வீட்டின் பின் புறத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடமொன்றின் அத்திவாரத்திற்கு அருகாமையில் புதைத்துள்ளார்.

பத்து நாட்களுக்கு முன்னதாக குறித்த நபர் மனைவியைக் கொன்று புதைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் மனதளவில் பாதிக்கப்பட்ட சந்தேக நபர் பள்ளிவாசலின் பிரதம குருவிடம் கொலை பற்றி சொல்லியுள்ளார்.

பிரதம குருவின் அறிவுறுத்தலுக்கு அமைய சந்தேக நபர் காலி பொலிஸ் நிலையத்தில் சரணடடைந்துள்ளார். சடலம் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து நீதவான் முன்னிலையில் நேற்றிரவு தோண்டி எடுக்கப்பட்டது.