ஈராக்கில் 250 முஸ்லிம்கள் கொடூரமாக கொலை!!

572

Iraq

ஈராக்கில் 250 சன்னி முஸ்லிம் கைதிகளை கொன்று குவித்து, போர்க்குற்றம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துமாறு அமெரிக்காவின் நியூயோர்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிற மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈராக்கில் பாதுகாப்பு படைகளும், அவற்றுக்கு ஆதரவாக செயல்படுகிற போராளிகளும், கடந்த மாதம் 9ம் திகதி முதல் சட்டத்துக்கு புறம்பாக குறைந்தது 255 சன்னி முஸ்லிம் கைதிகளை கொலை செய்துள்ளனர்.

இப்படி கூட்டம், கூட்டமாக நீதிக்கு புறம்பான வழியில் கைதிகள் கொல்லப்பட்டிருப்பது, அங்கு நடந்துள்ள போர்க்குற்றங்களுக்கு சான்றாக அமைந்துள்ளது. இது மனித குலத்துக்கு எதிரான குற்றமும் ஆகும்.

இது ஐ.எஸ்.ஐ.எஸ். என்னும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு பழிவாங்கும் விதத்தில் நடத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ். என்னும் தீவிரவாதிகளின் கொடூர செயல்களுக்கு உலகம் சரியான விதத்தில் கண்டனம் தெரிவிக்கிற வேளையில், அரசாலும், அரசு ஆதரவு படைகளாலும் இனவெறிக்கொலைகள் அரங்கேறுவதை கண்களைக் கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

மொசூல், தால் அபார், பாகுபா, ஜூமார்கே, ராவா ஆகிய இடங்களில் நடந்த இனப்படுகொலைகள் ஆவணப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

டஜன்கணக்கில் கைதிகளை தீ வைத்து எரித்தும் கொலை செய்துள்ளனர். கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அறைகளுக்குள் கையெறி குண்டுகளை வீசியும் கொலைகளை செய்துள்ளனர்.

இந்த இனப்படுகொலைகள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.