கைகளில் காதுகளுடன் அதிசய சிறுமி!!

597

அமெரிக்காவில் காதை இழந்த சிறுமி ஒருவருக்கு அவரது கைகளில் காது ஒன்று வளர வைத்து மீண்டும் பொருத்தப்படவுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தை சேர்ந்த கார்லோட்டா (12) என்ற சிறுமி மூன்று மாத குழந்தையாக இருந்த போது நக்கூன் என்ற விலங்கு காது, மூக்கு மற்றும் உதட்டின் பாதி பகுதியை கடித்து தின்றுள்ளது. இதனை அடுத்து மருத்துவர்கள் அவரது கைகளில் காது ஒன்றை பொருத்தியுள்ளனர்.

இந்த காது, நுரையீரல் குருத்தெலும்பு மூலம் காது போல் வடிவமைக்கபட்டது. இது இந்த சிறுமியின் கையில் பல மாதங்களுக்கு வளரக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், கார்லோட்டா நன்றாக உள்ளார் என்றும், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உடல் நலம் தேறிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சிறுமி, இதுவரை தனது மூக்கு, காது மற்றும் முகத்தை சரி செய்து கொள்ள 10க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் செய்துள்ளார்.

E2 E3 E4