இணையத்தில் மலர்ந்த காதல்… தென்கொரிய இளைஞரை திருமணம் செய்த தமிழ்ப்பெண்!!

309

தமிழக மாவட்டம் கரூரைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் தென்கொரிய இளைஞரை காதலித்து திருமணம் செய்தார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் விஜயலட்சுமி. இவருக்கும் தென் கொரியாவைச் சேர்ந்த மின்ஜுன் கிம் (28) என்ற இளைஞருக்கும் ஒன்லைன் மூலம் அறிமுகமாகியுள்ளது.

இருவரும் பேச ஆரம்பித்து நண்பர்களாகியுள்ளனர். நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இருவரும் தங்கள் பெற்றோரிடம் காதல் குறித்து கூறியுள்ளனர்.

இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே மின்ஜுன் கிம், விஜயலட்சுமி இருவரும் திருமணம் முடிவானது. இந்து முறைப்படி இவர்களுக்கு திருமணம் நடந்தது.