அடுத்த 8 வருடங்களுக்கு ஐசிசியின் பெரிய போட்டிகள் எதுவும் இலங்கையில் இல்லை!!

443

ICC

சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தின் முழுமை உறுப்பினரான இலங்கைக்கு அடுத்த 8 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கட் சபையின் எந்த ஒரு போட்டி நிகழ்ச்சித் திட்டமும் அட்டவணைப்படுத்தப்படவில்லை.

இலங்கைக்கு அடுத்ததாக பாகிஸ்தானும் 2009ம் ஆண்டு இலங்கை அணி மீது லாகூரில் இடம்பெற்ற தாக்குதல் காரணமாக சர்வதேச கிரிக்கட் சம்மேளன நிகழ்ச்சி திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.

அடுத்து வரும் 8 வருடங்களில் சம்மேளனத்தின் மூன்று பெரிய நாடுகளான இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் மத்தியிலேயே நிகழ்வுகள் பகிரப்படுகின்றன.

இதன்படி ஐசிசி 20க்கு 20 உலக கிண்ண போட்டிகள் 2016ல் இந்தியாவில் இடம்பெறவுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன் கிண்ண போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறுகிறது.

2019ல் உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறுகின்றது.

2020ல் ஐசிசி 20க்கு 20 போட்டிகள் அவுஸ்திரேலியாவில் இடம்பெறுகின்றன.

2021ல் ஐசிசி சாம்பியன் கிண்ண போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

ஐசிசி உலக கிண்ண போட்டிகள் 2023ல் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இதனைத்தவிர 19 வயதுக்குட்டோர் போட்டிகளும் பெண்கள் கிரிக்கட் போட்டிகளும் இந்த மூன்று நாடுகளில் மாத்திரமே இடம்பெறவுள்ளன.