இலங்கையில் 52 வயது பெண்ணுக்கு நடந்த கொடூரம் : தீவிர விசாணையில் பொலிஸார்!!

986

தஹய்யாகல பிரதேசத்தில் 52 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவரின் வீட்டிலிருந்து 50 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவ தினத்துக்கு முன்னைய தினம், பாதிக்கப்பட்ட பெண்ணின் அயல் வீட்டில் நபரொருவர் இந்தப் பெண்ணின் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு, அவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பெண் இரவு உறங்கச் சென்றபோது, வீட்டுக்கு வெளியில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுள்ள நிலையில்,

அவர் வீட்டின் பின்புறத்தில் உள்ள கதவைத் திறந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபரொருவர் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபர் வீட்டிலிருந்த 50 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர், அயல் வீட்டு உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.