யாழில் இராணுவ வாகனம் மோதி இளம் யுவதி பலி!!

417

யாழ். அச்சுவேலி பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி புத்தூர் கணம்புலியடி சந்தியில் இன்று(20.05.2024) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில், திவாகரன் – சரோஜா என்ற 23 வயதுடைய இளம் யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

புத்தூர் கணம்புலியடி சந்தியில் விபத்து இடம்பெற்று, வைத்தியசாலைக்கு கொண்டுவரும் முன்னர் யுவதி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வீதியை கடப்பதற்காக குறித்த யுவதி வீதியோரம் நின்றுள்ளார், யுவதி நின்ற திசைக்கு எதிர் திசையாக புத்தூர் சந்தியிலிருந்து இராணுவ உயரதிகாரிகள் பயணித்த வான் வேகமாக வருகைத்தந்துள்ளது.

இதன்போது, வீதியின் இடது பக்கத்தில் சென்ற வாகனம், வீதியின் வலது பக்கத்தில் நின்ற யுவதியை மோதி, மரத்திலும் அருகில் இருந்த ரோலர் இயந்திரத்துடனும் மோதி கவிழ்ந்தது.

இந்நிலையில் உயிரிழந்த யுவதியின் சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.