ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கும் பீட்ரூட் : எப்படி தெரியுமா?

406

பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலர் டயட்டைப் பின்பற்றுகிறார்கள், சிலர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார்கள்.

ஆனால் இதைச் செய்வது மட்டும் தீர்வாகாது, உடல் எடையை குறைக்க சரியான ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள வேண்டும்.

உடல் எடையை குறைக்க ஒரு ஆரோக்கியமான வழியை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் இந்த பதிவை முழுவதுமாக வாசித்து பார்க்கவும். வேகமாக உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் பீட்ரூடை இப்படி பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

 • அரைத்த ஓட்ஸ் – 1 கப்
 • பீட்ரூட் – 1 துருவியது
 • கேரட் – 2 துருவியது
 • முட்டைக்கோஸ் / கீரை – 1 கப்
 • தேவைக்கேற்ப உப்பு
 • கருப்பு மிளகு தூள் – அரை தேக்கரண்டி
 • தண்ணீர் ஒரு கப்

பீட்ரூட் ஓட்ஸ் செய்வது எப்படி?

 • முதலில் ஓட்ஸை மிக்ஸியில் அரைக்கவும்.
 • துருவிய அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் சேர்க்கவும்.
 • கருப்பு மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து மாவை தயார் செய்யவும்.
 • ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, மாவை கடாயில் போடவும்.
 • இருபுறமும் நன்றாக வேகவைக்கவும். இப்படி செய்து எடுத்தால் உடல் எடையை குறைக்கவும் பீட்ரூட் ஓட்ஸ் தயார்.

பீட்ரூட் ஓட்ஸ் நன்மைகள்

 • பீட்ரூட் ஓட்ஸ் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி, எடை குறைக்க உதவுகிறது.
 • ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு புரதம் கிடைக்கிறது. அதே நேரத்தில், பீட்ரூட், கேரட் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றிலும் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
 • இதை தயாரிப்பதில் எண்ணெய் மற்றும் மசாலா அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. இவ்வாறு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.