
ஏ.ரி.எம். அட்டையை திருடி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜாஎல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் குறித்த அட்டையின் உரிமையாளரது கணக்கிலிருந்து 12,4000 ரூபா பணத்தை மோசடியான முறையில் மீளப்பெற்றுக் கொண்டுள்ளார்.
ஏ.ரி.எம். அட்டையின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி பிரதேசத்தின் பல இடங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளார்.
20 வயதான சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதவானின் எதிரில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





