அவுஸ்திரேலியாவில் சமையல் போட்டியில் சாதனை படைத்த இலங்கையர்!!

224

அவுஸ்திரேலிய சமையல் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சமையல் போட்டியில் இலங்கையர் ஒருவர் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் இந்தப் போட்டியானது, மிகவும் ஆக்கப்பூர்வமான சமையல் கலைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கு படைப்பாற்றல் மற்றும் உணவின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்த ஒரு முக்கிய தளத்தை வழங்குகிறது.

போட்டிக்காக ஐந்து பிரிவுகளில் போட்டியிட்ட இலங்கையைச் சேர்ந்த ரெமோல்ட் பெர்னாண்டோ என்ற இளம் கலைஞர் வெற்றி பெற்றார்.

போட்டியில் நடைபெற்ற ஐந்து பிரிவுகளிலும் பதக்கம் பெற்றமை சிறப்பம்சமாகும். அவர் மூன்று தங்கப் பதக்கங்களையும், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மேலும், இலங்கையர் ஒருவர் இந்தப் போட்டியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு சிட்னியிலும், கடந்த ஆண்டு மெல்போர்னிலும் போட்டிகள் நடைபெற்றன.