வவுனியா பொலிஸாரால் வெசாக் தினத்தை முன்னிட்டு உணவு வழங்கல்!!

1134

வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா பொலிஸாரால் இன்று (23.05) தன்சல் வழங்கி வைக்கப்பட்டது.

வன்னி பிரதி பாெலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் ஏ9 வீதியில் அமைந்துள்ள பிரதி பாெலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்னால் சவ்வரசி கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

இதன் பாேது வீதியால் சென்ற பலரும் வாகனங்களை நிறுத்தி சவ்வரசி கஞ்சியை பருகி சென்றிருந்தனர்.

இதனையடுத்து, வவுனியா தலைமை பாெலிஸ் நிலையத்தில் சமுதாய பாெலிஸ் குழுவின் ஏற்பாட்டில் சமைத்த உணவுப் பாெதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்பாேது வீதியால் சென்ற மக்கள் நீண்ட வரிசையில் நின்று சமைத்த உணவுப் பாெதிகளை பெற்றுச் சென்றனர்.

இந் நிகழ்வுகளில் வன்னி மாவட்ட பிரதி பாெலிஸ்மா அதிபர் சாமந்த விஜயசேகர, சிரேஸ்ட பாெலிஸ் அத்தியட்சகர் மாலன் அஜந்த பெரேரா, வவுனியா தலைமை பாெலிஸ் நிலைய பாெறுப்பதிகாரி ஜெயக்காெடி, மதகுருமார், சமுதாய பாெலிஸ் குழு உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து காெண்டனர்.