கொள்ளையில் ஈடுபட்ட வெளிநாட்டு ஜோடி கைது!!

619

A6

சுப்பர் மார்க்கெட்டுக்களில் பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் வெளிநாட்டு ஜோடியை மாத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண் பாகிஸ்தான் பிரஜை எனவும் ஆண் ஈரானிய பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு செல்லும் பாகிஸ்தான் பெண் பிரஜை அங்கு பணியாற்றும் விற்பனையாளர்களுடன் பேசி கொண்டிருக்கும் போது, ஈரான் பிரஜை பணத்தை கொள்ளையிட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுப்பர் மார்க்கெட்டுகளில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.