
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியாற்றுமுனை பகுதியில் 13 வயதான சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 53 வயதுடைய சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் வைத்திய பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.





