மரணக் கிணறு இடிந்து விழுந்ததில் ஐவர் காயம்!!

607

கண்டி – திபுலபலஸ்ஸ, ரொட்டலவெல விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த மரணக் கிணறு இடிந்து வீழுந்ததில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு திவுலபலஸ்ஸ, ரொட்டவெல பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மரணக் கிணறே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் 13, 36, 40, மற்றும் 45 வயதுடைய நான்கு ஆண்களும் கிராதுருகோட் மற்றும் மஹியங்கனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திவுலபலஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் இருவர் கிராதுருகொட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூவர் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.