
இலங்கை கிரிக்கெட் வீரர் மஹெல ஜெயவர்த்தன டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மஹெல சமர்ப்பித்துள்ள கடிதத்தில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 33 சதங்கள் மற்றும் 48 அரைச்சதங்கள் அடங்கலாக 11,493 ஓட்டங்களை குவித்துள்ளார்.
அத்துடன் முன்னதாக 20க்கு இருபது போட்டிகளில் இருந்தும் இவர் ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





