காலி மாவட்டத்தில் தெல்வத்த – மீட்டியாகொடை பகுதியில் வீடொன்றில் இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞன் தன் நெற்றியில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு எடுத்துள்ள செல்பியை வைத்து இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நேற்று (23) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த இளைஞன் ஹிக்கடுவை தெல்வத்த மெட்டிவல பிரதேசத்தை சேர்ந்தவராவார். இந்நிலையில் இரவு நித்திரைக்கு சென்ற மகன் காலையில் எழுந்திருக்காத நிலையில் அறையின் கதவைத் தாயார் திறந்தபோது, சடலம் தரையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைத்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அதோடு உயிரிழந்த இளைஞனின் அருகில் இருந்த துப்பாக்கியை கருவா தோட்டத்தில் வீசியதாக தாயாரும் பாட்டியும் விசாரணையின் போது பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அங்கிருந்து பொலிஸார் இளைஞன் உயிரை மாய்த்துக் கொள்ள பயன்படுத்திய துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதோடு இளைஞன் போதைக்கு அடிமையானவர் என்பதும், காதலியால் காதல் உறவு துண்டிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இளைஞனின் கைத்தொலைபேசியை பொலிஸார் ஆய்வு செய்ததில் இவர் தன்னைத்தானே சுட்டுக் உயிரை மாய்த்து கொள்வதற்கு முன் அவர் எடுத்த செல்பியைக் கண்டுப்பிடித்தனர்.
இந்நிலையில் காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த சந்திரசிரின் பணிப்புரையின் பேரில் மீட்டியாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.