இலங்கை வீரர் எதிர்ப்பு : இடைநிறுத்தப்பட்ட சாம்பியன்ஷிப் போட்டி முடிவுகள்!!

263

ஜப்பானில் (Japan) நடைபெற்றுள்ள உலக பரா தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் F46 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் வீரர் ஆட்சேபனை வெளியிட்டதை அடுத்து போட்டி முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தப்போட்டியில், கியூபாவின் கில்லர்மோ வரோனா கோன்சாலஸ் முதலிடம் பெற்றுள்ளார் எனினும் இரண்டாம் இடத்தை பெற்ற இலங்கையின் பிரியந்த ஹேரத், கில்லர்மோ வரோனா கோன்சாலஸின் முடிவுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டார்.

இதனையடுத்தே இந்த போட்டியின் முடிவை அறிவிப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டியில் இந்தியாவின் ரிங்கு ஹடா (Rinku Hooda) மூன்றாவது இடத்தைப் பிடித்தார்