யாழில் பேரூந்திற்குள் காதல் ஜோடிகளின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!!

1533

யாழில் காதல் ஜோடிகளுக்கு அந்தரங்க பகுதியாக பேருந்துகள் மாறிவருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பஸ்கள் பருவகால ரிக்கட் வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல்லாது, இவ்வாறான காதலர்களை பேருந்து நின்று ஏற்றி செல்வதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றார்கள்.

குறிப்பாக மாலை வேளைகளில் யாழிலிருந்து செல்லும் பஸ்கள் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரியவருகின்றது. குறித்த பஸ்களின் மாஸ் போட்டபடி காதலர்கள் , மற்றும் நடுத்தரவயதை தாண்டிய தகாத உறவில் உள்ளவர்கள் ஜோடி ஜோடியாக அமர்ந்து லீலைகள் புரிவதாகவும் பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பஸ் நடத்துனர்கள், பொதுப்போக்குவரத்தில் எல்லைமீறும் காதலர்களை கண்டுகொள்வதில்லை எனவும், ஆதரவு கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அதேவேளை காதல் ஜோடிகள் பஸ்சை மறித்தவுடன் பஸ் நின்று அவா்களை ஏற்றிச் செல்வதாகவும் , பருவகால ரிக்கட் வைத்துக் கொண்டு நிற்கும் பயணிகளை ஏற்றாது செல்வதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒருகாலத்தில் கலாச்சாரத்திற்கும் , கல்விக்கும் பெயர்போன யாழ்ப்பாணத்தில் தற்போது சமூக சீகேடுகளும் குற்றங்களும் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.