தங்கபந்துக்கு சற்றும் தகுதியில்லாதவர் மெஸ்ஸி : மரடோனா பாய்ச்சல்!!

631

Messi

தங்கபந்து விருது வாங்க மெஸ்ஸி கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர் என்று முன்னாள் ஜம்பவான் மரடோனா கூறியுள்ளார். இந்த உலகக்கிண்ணத்தில் அணிக்காக அதிரடியாய் விளையாடிய மெஸ்ஸி மொத்தம் 4 கோல் அடித்தார்.

அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டி வரை வர மெஸ்ஸியின் கோல்கள் உதவின. ஆனால் இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் மஜிக் பலிக்கவில்லை. அர்ஜென்டினா தோற்றுப் போய் விட்டது.

மெஸ்ஸி கண்டிப்பாக கிண்ணம் வென்று தருவார் என்று இருந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாய் போய் விட்டது. ரசிகர்களுக்கு மட்டுமல்ல மெஸ்ஸியை தனது செல்லப்பிள்ளை என்று கூறி வளர்த்த மரடோனாவும் ஏமாற்றத்தில் மூழ்கி விட்டார்.

இது குறித்து முன்னாள் அர்ஜென்டினா அணித்தலைவர் மரடோனா கருத்து தெரிவித்துள்ளார். கோல்டன் பால் விருதை பெற மெஸ்ஸிக்கு தகுதி இல்லை. தகுதியில்லாத அவருக்கு விருது கிடைத்துள்ளது. இது நியாயமே இல்லை.

விருதை பெற மெஸ்ஸி விரும்பாததை நான் பார்த்தேன். உலகக்கிண்ண போட்டிகளில் 6 கோல்கள் அடித்த கொலம்பிய வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸுக்கு தான் தங்க பந்து விருதை கொடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.