சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குழந்தையின் மரணம் : வைத்தியசாலை நிர்வாகம் விளக்கம்!!

461

மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் இருபத்திநான்கு வயதுடைய தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில் குழந்தையொன்றைப் பெற்றெடுத்துள்ளதாகவும், சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தனது தனிப்பட்ட வைத்தியரின் அறிவித்தலின் பேரில் கடந்த (22 ஆம் திகதி) இறந்த தனது குழந்தையை பிரசவிப்பதற்காக கொட்வில புதிய மாவட்ட வைத்தியசாலையில் தாயொருவர் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் உபாலி கருணாரத்ன விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக தாயை பரிசோதித்த தனியார் வைத்தியர் ஸ்கேன் செய்ததில், வயிற்றில் இருந்த குழந்தையின் இதயம் வேலை செய்யாமல் குழந்தை உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், உயிரிழந்த குழந்தையை பிரசவம் செய்வதற்காக வைத்தியசாலைக்கு செல்லுமாறு தாய்க்கு வைத்தியர் அறிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த தாய் கொட்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை அகற்றுவதற்கு தேவையான மருந்துகளை வைத்தியசாலை ஊழியர்கள் தாயாருக்கு வழங்கியுள்ளனர்.

இதன்போது, ​​வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டதை தாயார் ஏற்றுக்கொண்டதாகவும், பிரசவத்திற்கு அனுமதி தருவதாகவும், அதற்கான ஆவணங்களை எழுதி கையொப்பமிட்டுள்ளார்.

இதன்பின்னர் கடந்த 24 ஆம் திகதி காலை குழந்தை உயிரிழந்த நிலையில் தாய் பிரசவித்துள்ளார். அதற்குள் கரு சற்று மோசமடைந்து விட்டதாகவும், முப்பத்தாறு வாரங்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து உயிரிழந்த குழந்தையின் உடலை ஏற்க உறவினர்கள் யாரும் முன்வரவில்லை எனவும், 25 ஆம் திகதி மதியம், உறவினர்கள் வந்து உடலைக் கேட்டுள்ளனர்.

வைத்தியசாலை ஊழியர்களிடையே சரியான தகவல்தொடர்பு இல்லாத சூழ்நிலையால் குழந்தையின் சடலம் அந்த நேரத்தில் பாதுகாவலர்கள் இல்லாத பிற உடல்களுடன் தகனத்திற்காக வைத்தியசாலை பிணவறையில் இருந்து லொறியொன்றில் அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து சடலத்தை ஒப்படைக்குமாறு உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய லொறியில் இருந்து சடலம் மீண்டும் வைத்தியசாலை பிரேத அறைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குழந்தை பிரசவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், நீதவான் வந்து பிரேத பரிசோதனை நடத்துவார் என்றும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்த (DNA) டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ள நிலையில், பரிசோதனை செய்யப்படும் எனவும் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.