வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் விளையாட்டு நிகழ்வு -2024

1242

வவுனியா இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் கடந்த 25.05.2024 சனிக்கிழமை இடம்பெற்றது.  சிட்டிகிட்ஸ் முன்பள்ளி ஆரம்பிக்கபட்டு பன்னிரெண்டு(12) வருடங்களை கடந்துள்ள  நிலையில்  இவ்வருடம் மாணவர்களிடையே   intelligence House (Purple),Talent House (Yellow ),Clever House(Green Colour)  என  இல்லங்கள் பிரிக்கப்பட்டு   முதன்முறையாக இல்ல அலங்காரங்களுடன் மழலையர்   இல்ல விளையாட்டு போட்டியாக இடம்பெற்றது.

முன்பள்ளியின் முதல்வர் திரு.நந்தசீலனின் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் திரு.யுகநீதன் (பொறியியலாளர்   தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை- வவுனியா  ) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் திருமதி நதீசியா சுஜிராஜ்  (உதவி அதிபர்- வவுனியா தமிழ் மத்திய  மகா வித்தியாலயம் ), திரு.ஜனகதீபன் ( முகாமையாளர் ஆதிரா குருப் ஒவ் கம்பனி ) ,N.A.P. சில்வா (பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்- மாவட்ட செயலகம் வவுனியா ) ஆகியோர்  கௌரவ  விருந்தினராகவும்  திருமதி.ஐ.தர்ஜிகா(ஆசிரியை – முருகனூர் சாரதா வித்தியாலயம் ),திருமதி.ஜனனி பிரேம்நாத் (அபிவிருத்தி உத்தியோகத்தர் –விவசாய பயிற்சி நிலையம் – வவுனியா),திருமதி.ஜெயமாலா அசோக்குமார் (அபிவிருத்தி உத்தியோகத்தர் –விவசாய பயிற்சி நிலையம் –,வவுனியா),திருமதி.சிவதர்சினி தபோசன் (முகாமைத்துவ சேவை உதவியாளர் –பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை –வவுனியா ),திருமதி சகிறிஸ்டலின் பெர்ணான்டோ  (ஆசிரியை – அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயம் ) ,திரு. செலவரத்தினம் நிரஞ்சன் (பாஸ்டர் ) திரு. த.கஜேந்திரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் திட்டமிடல்,  வடக்கு மாகாணம் ) ஆகியோர் சிறப்பு விருந்தினகளாகவும் கலந்து கொண்டனர் .

முன்பள்ளி மாணவர்களின் பேண்ட் வாத்திய அணிவகுப்புடன் அதிதிகள் அழைத்துவரப்பட்டு விளையாட்டு விழா ஆரம்பமானது.மேற்படி நிகழ்வில் ஆர்வத்துடன் போட்டிகளில் சிறார்கள் கலந்துகொண்டதுடன் போட்டியின் நிறைவில் விருந்தினர்களால் சிறுவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன .