முதலையை மணமுடித்த வினோத நபர்!!

597

மெக்சிகோ நாட்டின் மேயர் முதலையை திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் தென்பகுதியில் உள்ள சான் பெட்ரோ ஹம்லூல நகர மேயர் ஜோயல் வாஸ்க்வெஸ் ரோஜஸ் என்ற முதலையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணத்தின் போது முதலைக்கு வெள்ளை ஆடை அணிவித்து கொண்டுவரபட்டது. அப்போது மணமகன் முதலையுடன் உள்ளூர் மக்களின் முன் நடனமாடியுள்ளார்.

இதுகுறித்து உள்ளூரை சேர்ந்த ஒருவர் கூறுகையில், இது எங்களின் ஊரின் பாரம்பரியமாகும்.உள்ளூர் மீனவர்களுக்கு பசிபிக் கடலில் மீன்கள் கிடைக்கவே இவ்வாறு திருமணம் ஒன்றை மேயர் நடத்தியுள்ளார்.

இந்த பாரம்பரியம் எங்களின் முன்னோர்களால் விட்டு செல்லப்பட்ட அறிய பொக்கிஷமாகும் என்றும் இந்த இளம் தம்பதியினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் வெகு விமர்சையாக நடன நிகழ்ச்சிகள் மற்றும் வான வெடிக்கைகளுடன் நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு பலர் வருகை தந்திருந்தனர்.

C1 C2 C3 C4