சுமார் 23 கோடி ரூபா பெறுமதி திமிங்கல வாந்தி : மீனவர்கள் கைது!!

651

கற்பிட்டி, கந்தகுளிய பிரதேசத்தில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான 23 கிலோ நிறையுடைய திமிங்கல வாந்தியுடன் இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மீனவர்கள் இன்று (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மீனவர்கள் கந்தகுளி பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் மிதந்த திமிங்கல வாந்தியை மீனவர்கள் இரகசியமான முறையில் எடுத்துச் சென்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் மீனவர்களிடமிருந்த திமிங்கல வாந்தியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .