பெங்களூரில் இருந்து லண்டனுக்கு ஆட்டோவில் பயணம்செய்யும் நபர்!!

720

Auto

பெங்களூருவைச் சேர்ந்த மின் பொறியாளர் ஒருவர் தான் வடிவமைத்துள்ள சூரிய ஒளியால் இயங்ககூடிய ஆட்டோ மூலம் பெங்களூருவில் இருந்து லண்டனிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஆந்திராவில் பிறந்து தற்போது பெங்களூருவில் வசித்துவரும் நவீன் ரபெல்லி என்ற மின் பொறியாளர், சோலார் மின்சக்தியில் நீண்ட தூரம் செல்லும் ஆட்டோ ஒன்றை தயாரிக்க தனது வேலையை உதறியுள்ளார்.

இதற்காக இரண்டாம் தர மூன்று சக்கர ஆட்டோ ஒன்றை வாங்கி, அதை புதிதாக மாற்ற இரண்டு வருட காலம் முயன்றுள்ளார். இவ்வாறு அதில் புதிய பல பாகங்களை பொருத்தி உருவாக்கிய அந்த வாகனத்திற்கு தேஜாஸ் என்று பெயர் சூட்டியுள்ளார்.

ஆட்டோவில் மேல் பொருத்தப்பட்டுள்ள சூரிய தகடுகளின் மூலம் கிடைக்கும் சூரிய சக்தியினால் இந்த ஆட்டோ இயங்கும்.

அதில் முள்ள பட்டரியை எட்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் 50 மைல் தூரம் ஒடும். ஐந்து மணி நேரம் சார்ஜ் செய்தால் 18 மைல் தூரம் செல்லும்.

இத்திட்டத்திற்காக இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை ரபெல்லி செலவழித்துள்ள அவர், தனது லண்டன் பயணத்திற்கு முன் அசிட் பேட்டரியை மாற்றி லித்தியம் பட்டரியை பொருத்த அவர் முடிவு செய்துள்ளார்.

மேலும், பொருளாதார ரீதியாக தனது கண்டுபிடிப்பு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.