இன்று வெளியாகும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்!!

396

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346 976 பரீட்சாத்திகள் நாடுமுழுவதிலுமிருந்து தோற்றியுள்ளனர். இதில் 281,445 பாடசாலைப் பரீட்சாத்திகளும் 65,531 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் உள்ளடங்குவர்.