முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் சாதனை படைத்த மாணவர்கள்!!

690

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகளான இரவீந்திரராசா பிருந்தா, அன்பழகன் மீனுஜா முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (31) வெளியாகியிருந்தன.

இந்நிலையில், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா 3ஏ (3A) சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.



இதேவேளை அன்பழகன் மீனுஜா 3ஏ (3A) சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவு பெறுபேறுகளில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முன்னணி வகிக்கும் நிலையில் குறித்த மாணவிகளுக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.