இலங்கையின் உள்ளக கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசிக்கும் தமிழ் யுவதி!!

286

இலங்கையின் கழகமட்ட கிரிக்கட் அணிக்காக தற்போது விளையாடிவரும் மன்னார் மாவட்ட வீராங்கனையான சயந்தினி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருவராக மாற்றம் பெற்றுள்ளார்.

இளம் வயதிலேயே நேர்த்தியான பந்துவீச்சினை வெளிப்படுத்திய அவர் தற்போது 23 வயது பெண்களுக்கான National Super League போட்டிகளில் விளையாடி வருகின்றார்.

National Super League போட்டிகளில் அவர் கடந்த 27ஆம் திகதி தனது அறிமுகப் போட்டியில் விளையாடியுள்ளார்.

கொழும்பு அணிக்காக விளையாடும் அவர் ஆரம்ப பந்து வீச்சாளராக செயற்பட்டிருந்தார்.

இந்தப் போட்டியில் இரண்டு ஒவர்களை வீசிய சயந்தினி வெறும் 10 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தியிருந்தார்.