நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை!!

1261

புதிய இணைப்பு : சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்கள் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஹோமாகம கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சற்று முன்னர் அறிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு : காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு தொடர்ந்து இரு தினங்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை(04.06) மற்றும் நாளை மறுதினம் (05.06) இவ்வாறு குறித்த மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கல்வி அதிகாரிகளுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்று தென் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.