இரண்டு தங்கப் பதக்கங்களை தனதாக்கிய இலங்கை வீராங்கனை தருஷி!!

450
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890

தாய்வான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இறுதி நாளில் இலங்கையின் தடகள வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் நேற்றையதினம் கலந்துக்கொண்ட அவர் குறித்த வெற்றியை பதிவு செய்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890

போட்டித் தூரத்தை 2 நிமிடங்கள் 05.74 செக்கன்களில் நிறைவு செய்த அவர், 2024 பாரிஸ் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை 0.04 செக்கன்களால் தவறவிட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

எனினும் நேற்று முந்தினம் நடந்த பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 52.48 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்ற அவர் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று 2 தங்கப்பதக்கங்களை தனதாக்கியுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890

மேலும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட டில்ஹானி லேக்கம்கே, 52.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890