சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உடலில் இன்சுலின் என்னும் ஹார்மோன் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் போது, இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால், சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
சர்க்கரை நோயாளிகள் பழங்களை அளவாக தான் சாப்பிட வேண்டும். இன்று சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை சாப்பிடலாம். ஆனால் அது அவற்றின் முதிர்ச்சியைப் பொறுத்தது. அதாவது, பச்சை அல்லது பழுக்காத வாழைப்பழம் ஒட்டுமொத்த மெட்டபாலிச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆனால் நன்கு கனிந்த வாழைப்பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு அவ்வளவு நல்லதல்ல. கனியாத வாழைப்பழத்தில் அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்தும் குறைவான சர்க்கரையும் உள்ளது.
இவை சிறுகுடலில் ஜீரணிப்பதை எதிர்க்கின்றன. இதனால் இவை பெருங்குடலில் நொதித்து, பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாகின்றன.
ஆனால் நன்கு கனிந்த வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்துவிடும். எனவே சற்று கவனமாக இருங்கள்.
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 1-2 மீடியம் சைஸ் வாழைப்பழத்தை சாப்பிடலாம்.
இருப்பினும், இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்களை அனுபவிப்பவர்கள், ஒரு உணவியல் நிபுணர் அல்லது மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே வாழைப்பழங்களை உட்கொள்ள வேண்டும்.
அதே சமயம், வாழைப்பழத்தினால் சந்திக்கும் மோசமான விளைவைத் தடுக்க சர்க்கரை நோயாளிகள் ஒருசிலவற்றை பின்பற்ற வேண்டும். இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்க, சிறிய அளவிலான வாழைப்பழத்தை ஆசைக்காக சாப்பிடலாம்.
அளவுக்கு அதிகமாக கனிந்த வாழைப்பழத்தை தவிர்த்து, லேசாக பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடவும். வாழைப்பழம் சாப்பிடும் போது, மற்ற பழங்களை அதிகம் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள். இதனால் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்கலாம்.
வாழைப்பழத்தை சாப்பிடும் போது நட்ஸ், யோகர்ட், சூரியகாந்தி விதைகள் அல்லது வேர்க்கடலை வெண்ணெய் போன்ற புரோட்டீன் உணவுகளுடன் எடுக்கும் போது, சர்க்கரையை உறிஞ்சும் திறன் தாமதப்படுத்தப்படும்