பிரபல நடிகை ஷிமானா திடீர் மரணம்!!

338

பிரபல நடிகை ரிஷ்டா லபோனி ஷிமானா உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன் தினம் காலமானார். அவருக்கு வயது 39. மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்ததாக அவரது சகோதரர், நடிகை ஷிமானா காலமான செய்தியை அறிவித்துள்ளார்.

பிரபல மாடலும் நடிகையுமான ரிஷ்டா லபோனி ஷிமானா நேற்று முன் தினம் ஜூன் 4ம் தேதி காலை பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழகத்தில் (பிஎஸ்எம்எம்யு) மூளைச்சாவு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் எஜாஸ் பின் அலி மற்றும் அவரது முன்னாள் கணவர் பாடகர் பர்வேஸ் சாசாத் ஆகியோர் இந்த தகவலை உறுதிப்படுத்தினர்.

மூளைச்சாவு அடைந்த நிலையில், கடந்த 14 நாட்களாக சுயநினைவின்றி இருந்த நடிகை ஷிமானா கடந்த மே 21ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது குடும்பத்தினர் அளித்த தகவல்களின் படி, மே 21ம் தேதியன்று இரவு ஷிமானாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதும், டாக்காவின் தன்மோண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அடுத்த நாள் மேல் சிகிச்சைக்காக தன்மோண்டியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் தலைநகர் அகர்கானில் உள்ள தேசிய நரம்பியல் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு மே 25ம் தேதியன்று மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், மே 29ம் தேதி அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நடிகை ரிஷ்டா லபோனி ஷிமானா 2006ம் ஆண்டில் நட்சத்திரங்கள் நிறைந்த லக்ஸ்-சேனல் ஐ சூப்பர் ஸ்டார் போட்டியுடன் திரையுலகில் நுழைந்தார். அந்த சீசனின் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் நடித்திருந்த “தாருசினி ட்விப்” திரைப்படம் ரசிகர்களிடையே பெரிதும் கொண்டாடப்பட்டது. ஷிமானா தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார்.

கடந்த 2014ல் பிரபல பாடகர் பர்வேஸ் சசாத்தை திருமணம் செய்து கொண்ட ஷிமானா 2016ல் கர்ப்பமடைந்த நிலையில், திரைத்துறையில் இருந்து சிறிது காலம் ஒதுங்கினார். இறுதியில் இந்த ஜோடி விவாகரத்து பெற்றது. பின்னர் 2019ல் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் திரையுலகில் நுழைந்தார்.