போலி முறைப்பாடு செய்து தப்பிக்க முயன்ற யுவதிக்கு சிறைத்தண்டனை!!

279

குளியாப்பிட்டியாவில் போலி முறைப்பாடு செய்த யுவதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான முறைப்பாடு செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முறைப்பாட்டாளருக்கு ஒரு மாத கட்டாய சிறைத்தண்டனையை நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் விதித்துள்ளார்.

உயர்கல்வி கற்கும் பன்னல பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரே இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளான தனஞ்சனி பஸ்நாயக்க மற்றும் சுகந்திகா முன்னிலையில் தான் ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக யுவதி அளித்த வாக்குமூலத்திற்கமைய, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் நீண்ட நாட்களாக காதல் தொடர்பில் இருந்ததாக தெரியவந்ததையடுத்து, குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்து பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

காதலனுடன் தனிமையில் இருந்தமை வீட்டுக்கு தெரிய வந்த நிலையில், அதிலிருந்து தப்பிக்க போலி முறைப்பாடு மற்றும் தகவல்கள் யுவதி வழங்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.