காபூல் சர்வதேச விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு : 90 பேர் பலி!!

567

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் தலீபான்கள் நடத்திய குண்டுவெடிப்பில் 90 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலானா நோட்டோ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காபூல் சர்வதேச விமானநிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் கட்டிடம் ஒன்றை கைப்பற்றிய தலீபான் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியும், ரோக்கெட் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் 90 பேர் பலியாகியுள்ளனர்.150க்கும் பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாக்குதலின் போது அப்பகுதியில் இருந்த அந்நாட்டின் இராணுவ வீரர்கள் தலீபான்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது ஐ.நா வில் நடந்து வரும் ஆப்கான் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

K1 K2 K3