கால்கரியில் இருந்து மெக்சிகோவை நோக்கி சென்றுக்கொண்டிருந்த பலங்கால ரயில் மோதி இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
1930 ஆண்டு நீராவி இன்ஜீன் கொண்டு உருவாக்கப்பட்ட பேரரசி’ என்று அழைக்கப்படக்கூடிய பழங்கால ரயில் கடந்த ஏப்ரல் மாதம் கால்கரியில் இருந்து புறப்பாட்டு கனடா, அமெரிக்கா வழியாக மெக்சிகோவைச் சென்றடையகிறது.
குறித்த ரயில் நாளை மெக்சிகோவில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது. பின்னர், ஜூலை மாதம் கனடா திரும்பி, அத்துடன் அங்கு ஓய்வு பெறுகிறது.
இந்த நிலையில், பேரரசி ரயில் மெக்சிகோவில் நுழையும்போது ஹிடால்கோ பகுதி அருகே பலரும் புகைப்படம் எடுப்பதற்காக கூடியிருந்துள்ளனர்.
அப்போது, தன் மகனுடன் வந்திருந்த இளம்பெண் ஒருவர் பேரரசி ரயில் முன்பு செல்பி எடுக்க தனது செல்போனை எடுத்தார். ரயில் அருகே வரும்போது, தண்டவாளம் அருகே சென்ற இளம்பெண் செல்போனுடன் முட்டிபோட்டு அமர்ந்தார்.
அப்போது, ரயிலின் எஞ்ஜீன் இளம்பெண்ணின் தலையில் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் அடிபட்ட நொடியிலேயே உயிரிழந்துள்ளார். குறித்த ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
MEXICO – In Hidalgo, a famous train that comes from Canada and travels all the way to Mexico City, attracting locals, struck a woman who was trying to take a selfie as the train approached. She passed at the scene. Article in comments. pic.twitter.com/32XdsCehEB
— The Many Faces of Death (@ManyFaces_Death) June 5, 2024