அதிகாலையில் கோர விபத்து : தந்தையும் மகளும் பரிதாபமாக பலி!!

1463

கம்பஹாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எடேரமுல்ல பிரதேசத்தில் உள்ள தொடருந்து கடவையில் பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடருந்து கடவையில் மோட்டார் வண்டியொன்று தொடருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காரில் பயணித்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக பிரதான பாதையில் இயங்கும் தொடருந்து தாமதமாகலாம் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.