பிரித்தானியாவில் ஒரு தம்பதியருக்கு மூக்கு இல்லாமல் அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்தவ நாதன், கிரன்னி என்ற தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தையான டெஸா எவன்ஸுக்கு பிறக்கும் போதே மூக்கு இல்லை.
தற்போது 17 மாதம் ஆகும் அந்த பெண் குழந்தைக்கு, கன்ஜெனிடல் அர்ஹினியா (congenital arhinia), என்ற குறைபாட்டினால் மூக்கு இல்லாமல் பிறந்த இக்குழந்தை, தன்னுடைய வாயின் மூலமே மூச்சுவிட்டு உயிர் வாழ்ந்து வருகிறாள்.
இதுமாதிரியான வினோத குறையுள்ள குழந்தைகள் உலகிலேயே இதுவரை 40 குழந்தைகள்தான் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூக்கு இல்லாததால், வாசம் என்பதையே என்னவென்று அறியாத இந்த குழந்தைக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் தொந்தரவு மட்டும் இருப்பதாக குழந்தையின் தாயார் கிரன்னி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மூக்கு இல்லாமல் இருந்தாலும், தன்னுடைய குழந்தை எப்போதும் புன்னகையுடனே இருப்பாள் என்று பெருமையாக தெரிவித்துள்ளார்.






