கொழும்பில் இருந்து சென்ற வாகனம் கோர விபத்து : யுவதி பரிதாபமாக பலி!!

1042

கேகாலை மங்களகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் கேகாலை மங்களகம பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

முச்சக்கர வண்டியொன்று எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் மூவர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த யுவதி படுகாயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற விபத்தின் பின்னர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



உயிரிழந்த யுவதி ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி என தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், ரம்புக்கன, உடகல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த, விபத்தில் உயிரிழந்த யுவதியின் நாயும் உயிரிழந்துள்ளது.

அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவி என்றும், இன்னும் சில நாட்களில் தனது பட்டப்படிப்பை முடிக்க தயாராகியிருந்தார் என கூறப்படுகிறது.