காதலுக்கு வயதில்லை : 100 வயது நபரை திருமணம் முடித்த பெண்!!

165

பிரான்சில் காதலுக்கு வயதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 100 வயது நபர் தம்முடைய 96 வயதுக் காதலியைக் கரம் பிடித்துள்ளார்.

ஹரலட் டெரென்ஸும் ஜீன் ஸ்வெர்லினும் நேற்று முன்தினம் (ஜூன் 8) திருமணம் செய்துகொண்டனர்.

“இளையர்களுக்கு மட்டும்தான் காதலிக்கும்போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்குமா? எங்களுக்கும்தான்” என்று திருமதி டெரென்ஸ் கூறியதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

அன்பை எந்த வயதிலும் காணலாம், இந்த ஜோடி சிறந்த உதாரணம். இரண்டாம் உலகப் போரின் வீரரான 100 வயதான ஹரோல்ட் டெரன்ஸ், தனது 96 வயது காதலியான ஜீன் ஸ்வெர்லினை சனிக்கிழமையன்று பிரான்சின் நார்மண்டியின் வரலாற்று சிறப்புமிக்க டி-டே கடற்கரைக்கு அருகில் ஒரு காதல் விழாவில் மணந்தார்.

மேலும் இவர்களின் திருமணத்திற்கு வந்திருந்தோரும் ஆரவாரத்துடன் . புதுமணத் தம்பதியை வாழ்த்தியுள்ளனர்.