நடிகை ரோஜாவை முற்றுகையிட்டு தொண்டர்கள் ரகளை!!

629

Roja

ஆந்திராவில் நகரி நகராட்சிமன்ற கூட்டத்தில் நடிகை மற்றும் எம்.எல்.ஏ.வான ரோஜாவை தெலுங்கு தேச கட்சியினர் முற்றுகையிட்டுள்ளனர்.

நகரி நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ரோஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

அந்த கூட்டத்திற்கு தெலுங்கு தேச உறுப்பினர்கள் வருவதற்கு முன்னரே, அவைத் தலைவர் சாந்தி, அவை நிகழ்ச்சிக் குறிப்பைபடிக்க தொடங்கியதால், கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு ஆணையர், ரோஜாவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கு ரோஜா உட்பட வய்.எஸ்.ஆர் கவுன்சிலர்கள் சம்மதிக்காததால், சபையில் இருந்து ஆணையர் வெளியே சென்றுள்ளார்.

இந்த சமயத்தில் தெலுங்கு தேச நகராட்சி உறுப்பினர்கள் அவைக்குள் நுழைந்து, அவையை ஒத்தி வைக்கும்படி கூறியதால் அவையில் அமளி ஏற்பட்டுள்ளது.

மேலும், தெலுங்கு தேச உறுப்பினர்கள் நகரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அவைக்குள் இருந்த ரோஜா, நகர மன்ற தலைவர் சாந்தி உட்பட யாரும் வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ரோஜாவை மீட்டு அனுப்பி வைத்துள்ளனர்.